ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டம்

X
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (ஜூன் .17) காலை தொடங்கியது. மதுரை மாவட்ட எஸ்பி அரவிந்தன், வெங்கடேசன் எம். எல். ஏ வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பசும்பொன்மாறன், செயல் அலுவலர் இளமதி, பேரூராட்சி தலைவர் எஸ். எஸ். கே. ஜெயராமன், பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், சமயநல்லூர் டிஎஸ்பி, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மணிகண்டன், பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார், பேரூராட்சி எட்டாவது வார்டு கவுன்சிலர் தொழிலதிபர் டாக்டர் மருதுபாண்டியன், திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன், தொமுச செயலாளர் பாலசுப்பிரமணியன், முத்துக்குமரன் நகை மாளிகை இருளப்பன் என்று ராஜா ஆகியோர் தேர வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். சோழவந்தான்
Next Story

