ஆற்று மணலை கடத்தி விற்பனை செய்தவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.

ஆற்று மணலை கடத்தி விற்பனை செய்தவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.
ஆற்று மணலை கடத்தி விற்பனை செய்தவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது. கரூர் மாவட்டம் ,மூக்கனாங்குறிச்சி அருகே நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் சூர்யா வயது 34. இவர் கடந்த மே 30ஆம் தேதி வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏமூர் புதூரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக ஆற்று மணலை கடத்தி விற்பனை செய்தது தொடர்பாக கைது செய்து வெள்ளியணை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். இவரது பின்னணியை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, அவர் மீது குண்டர் தடுப்பு காவல்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் தங்கவேலுக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரை ஏற்ற மாவட்ட ஆட்சியர் தங்கவேல் குற்றம் சாட்டப்பட்ட சூர்யா மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இன்று சூர்யாவை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story