சூளகிரி அருகே வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு.

சூளகிரி அருகே வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு.
X
சூளகிரி அருகே வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மவட்டம் ஒசூர் சிப்காட் மூக்கண்டப்பள்ளி ரோஸ் கார்டனை சேர்ந்தவர் மணி (54) தனியார் நிறுவன ஊழியர். இவருடன் மனைவி அமுதா (46) ஆகிய இருவரும் டூவீலரில் கிருஷ்ணகிரி -ஒசூர் தேசிய நெடுஞ்சாலை சப்படி அருகே சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மணியை அங்கிருந்தவர்கள் மீட்டு சூளகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். மனைவி அமுதா படுகாயத்துடன் ஓசூர் அரசு அருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகி றார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story