முருக பக்தர்கள் மாநாடு. காவல்துறை அறிவிப்பு

முருக பக்தர்கள் மாநாடு.  காவல்துறை அறிவிப்பு
X
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது
மதுரை பாண்டி கோவில் அருகில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு காவல் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே இந்து முன்னணி சார்பில் வரும் ஜூன் 22ஆம் தேதி நடைபெற உள்ள முருகர் பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும் மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புவோர் அந்தந்த SP அலுவலகத்தில் விண்ணப்பித்து வாகன அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளலாம் விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் மாவட்ட வாரியாக பச்சை, நீலம், மஞ்சள் நிறம் என வாகனங்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்படும் தென்மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட வழியாக மட்டுமே திடலுக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
Next Story