மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக மாநில அளவிலான இலவச முழுமாதிரித் தேர்வு நடைபெற உள்ளது

X
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-4 க்கான தேர்வு 12.07.2025 அன்று நடக்கவிருக்கிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக மாநில அளவிலான இலவச முழுமாதிரித் தேர்வு 22.06.2025, 28.06.2025 மற்றும் 05.07.2025 ஆகிய தேதிகளில் விருதுநகர், VHNSN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவிருக்கிறது. இத்தேர்வில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் https://forms.gle/XUKsuqtwiU7ckqgq9 என்ற கூகுள் பார்ம் மூலமாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக தெரிவிக்கலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை 93601-71161 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த தேர்வில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Next Story

