மாவட்ட கலெக்டருக்கு எதிராக கண்டன கோஷங்கள்

X
Komarapalayam King 24x7 |17 Jun 2025 9:01 PM ISTகுமாரபாளையத்தில் மயான பாதுகாப்பு குழுவினர் மாவட்ட கலெக்டருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட இந்து சமத்துவ மயானத்தில், இந்துக்கள், கிறிஸ்துவர்கள், தங்கள் சமுதாய மக்கள் சடலங்களை அடக்கம் செய்து வந்தனர். சில நாட்கள் முன்பு, கிறிஸ்துவர்கள் சடலங்கள் அடக்கம் செய்த இடங்களின் மேல், சிலுவை சின்னங்கள் வைத்தனர். இதற்கு இந்து அமைப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். தங்களுக்கு குறிப்பிட்ட இடம் ஒதுக்கி கொடுங்கள் என்று கிறிஸ்தவர்கள் கேட்க, குறிப்பிட்ட இடம் ஒதுக்க, நிலம் அளவீடு செய்ய அதிகாரிகள் மயானத்திற்கு வந்தனர். அப்போது, இந்து மயான பாதுகாப்பு குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து, மயான வாசலில் தர்ணா போராட்டத்தை, வழக்கறிஞர் தங்கவேல் தலைமையில் ஈடுபட்டனர். நேற்று ஆய்வுக்காக குமாரபாளையம் வந்த நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, இந்த மயானத்திற்கு வந்தார். அப்போது மயான பாதுகாப்பு குழுவினர் வந்து, தற்போதைய நிலையை கூற, இது அரசு இடம். நாங்கள் யாருக்கு வேண்டுமானாலும் தருவோம், என்று கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு கலெக்டரை கண்டித்து, கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது குறித்து வழக்கறிஞர் தங்கவேல் கூறியதாவது: தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட மயானத்தின் நுழைவுப்பகுதியில் இந்த இந்து சமய சமத்துவ மயானம், என்றுதான் எழுதப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, இந்த இந்து சமய சமத்துவ மயானத்திற்கு வந்தார். நாங்கள் எங்கள் கோரிக்கையை சொன்னோம். பல ஆண்டுகள் முன்பு, ஆர்.டி.ஓ. பேச்சுவார்த்தை நடத்தி, இது இந்துக்கள் மயானம் என்பது உறுதி செய்யப்பட்டது என்று கூறினோம். அதை சற்றும் கேட்காமல், இது அரசுக்கு சொந்தமான இடம். நாங்கள் யாருக்கு வேண்டுமானாலும் தருவோம் என்று கூறினார். அதனால் நாங்கள் தர்ணா செய்தோம். கலெக்டருக்கு எதிராக கண்டன கோஷங்கள் போட்டோம். அதிகாரிகள் எங்களை அழைத்தனர். அதிகாரிகள் வசம் சென்று அமைதி பேச்சுவார்த்தை நடத்த கேட்டுள்ளோம். அதில் பங்கேற்று, எங்கள் கருத்தை சொல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
