தஞ்சாவூரில் புதன்கிழமை உயர் கல்வி சேர்க்கை வழிகாட்டும் முகாம்

X
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையிளை அதிகரிக்கும் பொருட்டு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளஅறை எண்.01-இல், உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. மேலும், உயர் கல்வி சேரும் மாணவர்கள், பெற்றோர் அற்ற மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஒற்றை பெற்றோர் உள்ள மாணவர்கள், ஏதிலியர் முகாமில் வாழும் மாணவர்கள், உயர்கல்வி சார்ந்த விழிப்புணர்வு தேவைப்படும் மாணவர்கள், குடும்ப உறுப்பினர்கள், உடல்நிலை சரியில்லாத காரணத்தால், பெற்றோர்கள் விருப்பமின்மையால் மற்றும் சமூக காரணங்களால் உயர்கல்வி செல்ல இயலாத மாணவர்கள், சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவர்கள், குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர்க்கையில் ஏற்படும் குறைபாடுகளை களைந்து தீர்வு காணும் வகையில் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த உயர்கல்வி வழிகாட்டி மாணவர்களுக்கான குறைதீர்ப்பு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்ப்பு கூட்ட அரங்கம், அறை எண்.10-இல் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில், 18.06.2025 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெற உள்ளது. இதனை உயர்கல்வியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளமாறு" மாவட்ட ஆட்சியரக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

