தஞ்சாவூா் அருகே இன்று ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி, ரயில்வே காவல்துறை விசாரணை

X
தஞ்சாவூர் அடுத்த ஆலக்குடி - பூதலூருக்கு இடைப்பட்ட ரயில்வே தண்டவாளம் அருகே செவ்வாய்க்கிழமை காலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, தஞ்சாவூர் ரயில்வே இருப்பு பாதை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் . அதன் பேரில் ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் ராமநாதன், தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் விநாயகமூர்த்தி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணமாக கிடந்தவரை பார்த்தனர். ஆனால் அவர் யார் ? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை . இறந்து கிடந்த நபரின் கையில் சாபதி என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து காவல்துறையினர் பிணத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் ரயிலில் அடிபட்டு அந்த நபர் இறந்தது தெரிய வந்தது. தொடர்ந்து இறந்த நபரின் ஊர்? பெயர் ? உள்ளிட்ட விவரங்களை விசாரித்து வருகின்றனர்.
Next Story

