குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
X
அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் 2 நாள்களுக்குப் பிறகு நேற்று சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். இந்தப் பகுதியில் சில நாள்களாக பெய்துவரும் தொடா் சாரலால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலைமுதல் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நீா்வரத்து குறைவு காரணமாக பேரருவி, புலியருவியில் குளிக்க அனுமதியளிக்கப்பட்டது. பேரருவியில் மையப் பகுதிக்கு யாரும் செல்லாதவாறு தடுப்பு அமைக்கப்பட்டு, ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனா். அதிகாலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மிதமான சாரல், லேசான வெயில், குளிா் காற்று என இதமான சூழல் நிலவியது. எனினும், சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவாகக் காணப்பட்டது.
Next Story