அஞ்செட்டி: அனுமதியின்றி எம்.சாண்ட் எடுத்து சென்ற மினிலாரி பறிமுதல்

அஞ்செட்டி: அனுமதியின்றி எம்.சாண்ட் எடுத்து சென்ற மினிலாரி பறிமுதல்
X
அஞ்செட்டி: அனுமதியின்றி எம்.சாண்ட் எடுத்து சென்ற மினிலாரி பறிமுதல்
கிருஷ்ணகிரி மவட்டம் அஞ்செட்டி கிராமத்தில் நேற்றுமுன்தினம் இரவு அஞ்செட்டி தாசில்தார் கோகுல்நாத் தலைமையில் வருவாய் துறையினர் அஞ்செட்டி பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் உரிய அனுமதி இன்றி எம்.சாண்ட் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து மினிலாரியை கைப்பற்றி அஞ்செட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story