காவேரிப்பட்டிணம்:அங்கன்வாடி ஊழியர்கள்,உதவியாளர் ஆர்ப்பாட்டம்

X
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் திம்மாபுரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி வட்டார அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் மாவட்ட துணை தலைவி மஞ்சுளா தலைமை வகித்தார். ஒன்றிய தலைவி குப்பு வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எட்டு வருடங்களாக புதிய செல்போன் வழங்காத பல மாவட்டங்களுக்கு உடனடியாக புதிய செல்போன் வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

