பள்ளிவாரமங்கலம் சாலையை சீரமைக்க வலியுறுத்தி மறியல்

X
திருவாருரில் இருந்து பள்ளிவாரமங்கலம் செல்லும் சாலையை பழையவலம்,ஆமூா், திருவாதிரைமங்கலம், திருப்பள்ளிமுக்கூடல் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.இந்த சாலை பழுதடைந்து,குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதுகுறித்து உரிய அலுவலா்களின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பள்ளி மாணவர்கள் நேற்று புதிய சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story

