கோவை: ஆற்றில் எதிர்நீச்சல் அடித்த காட்டு யானை !

X
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள நொய்யல் ஆற்றில், வெள்ளப்பெருக்கை மீறி நேற்று எதிர்நீச்சல் அடித்த காட்டு யானையின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தென்மேற்கு பருவமழையால் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வந்ததால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருகியுள்ளது. இந்நிலையில், தொண்டாமுத்தூர் அருகே சப்பாணி மடை பகுதியில் ஒரு காட்டு யானை தண்ணீரில் நடந்து செல்வது பதிவு செய்யப்பட்டு, மழையில் எங்கப்பா போற? என பேசும் குரலுடன் காணப்படுகிறது. இந்த வீடியோ வனத்துறை அதிகாரிகளையும், சமூக வலைதளங்களையும் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Next Story

