கோவையில் மின்வாரிய அதிகாரி லஞ்சம் வாங்கிய போது கைது !

கோவையில் மின்வாரிய அதிகாரி லஞ்சம் வாங்கிய போது கைது !
X
கோவை மாவட்ட சோமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் லஞ்சம் வாங்கிய புகாரில் லஞ்ச ஒழிப்பு துறையால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்ட சோமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் சபரிராஜ், ரூ.20,000 லஞ்சம் வாங்கிய புகாரில் லஞ்ச ஒழிப்பு துறையால் கையும் களவுமாக நேற்று கைது செய்யப்பட்டார். திருப்பூரைச் சேர்ந்த செந்தில்பிரபு என்பவர், தந்தையின் நிலத்தில் உள்ள மின்கம்பத்தை மாற்ற விண்ணப்பித்தபோது, அதிகாரி ரூ.20,000 லஞ்சம் கேட்டதாக புகார் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் கண்ணுக்குத் தெரியாத ரசாயனம் பூசப்பட்ட பணத்தை வழங்க செய்தபோது, அதை பெற்றுக்கொண்ட சபரிராஜ் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story