ஏடிஎம் பணம் கொள்ளையில் நாடகம் ஆடியது அம்பலம் மேலும் இரண்டு பேர் கைது

X
தனியார் ஏ.டி.எம்.,க்கு பணம் வைக்க கொண்டு சென்ற, ரூபாய் 29 லட்சத்தை கத்தியை காட்டி மிரட்டி பறிப்பு சம்பவம் எதிரொலி.பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடியவர் உட்பட 2 பேர் கைது. கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இரவு நேரத்தில், பாதுகாப்பு இல்லாமல் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றனர்.
செம்பட்டி அருகே, தனியார் ஏ.டி.எம்., க்கு பணம் வைக்க கொண்டு சென்ற, ரூபாய் 29 லட்சத்தை கத்தியை காட்டி மிரட்டி கடந்த வெள்ளிக்கிழமை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் எதிரொலி காரணமாக, சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும், பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடியவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவரை, செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இரவு நேரத்தில், பாதுகாப்பு இல்லாமல் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற சம்பவம் தான் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம், தேவதானப்பட்டியைச் சேர்ந்தவர் நாகஅர்ஜுன் (30) இவர், தனியார் ஏ.டி.எம்,மில் பணம் வைக்கும் ஏஜென்சி நடத்தி வரும், தேவதானப்பட்டியைச் சேர்ந்த முருகன் (51) என்பவரிடம் நாகஅர்ஜுன் உட்பட இரண்டு பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நாக அர்ஜுன் வெள்ளிக்கிழமை மாலை செம்பட்டில் இருந்து சின்னாளப்பட்டியில் உள்ள ஏ.டி.எம்.,மில் பணம் வைப்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் ரூபாய் 29 லட்சத்துடன் செம்பட்டி அடுத்த, புதுகோடாங்கிபட்டி - அம்பாத்துரை சாலையில் சென்றுள்ளார். அப்போது, புதுகோடாங்கிபட்டி அடுத்த டாஸ்மாக் மதுக்கடை அருகே, இவரை வழிமறித்த 3 மர்ம நபர்கள் இவரின் கழுத்தில் கட்டிய வைத்து கொலை செய்து விடுவோம் என மிரட்டி ரூபாய் 29 லட்சத்தை பறித்து விட்டு தப்பி ஓடியதாக, ஏஜென்சி நடத்தி வரும் உரிமையாளர் முருகனுக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து முருகன் செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் பேரில் செம்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைத்து, அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். விசாரணையில் கொள்ளையர்கள் தப்பி ஓடிய வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து அந்த இருசக்கர வாகனம் தேவதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தது என தெரிய வந்தது. மேலும், தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ரூபாய் 29 லட்சம் கொள்ளை போனதாக நாடகம் பாடிய நாக அர்ஜுன், போலீஸ் விசாரணையில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார். தனிப்படை போலீஸ் விசாரணையில், ரூபாய் 29 லட்சத்தை பறிகொடுத்த நாக அர்ஜுன் பதட்டம், பரபரப்பு இல்லாமல் பதில் கூறியது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. போலீஸாரின் கிடுக்கு பிடி விசாரணையில் தனது நண்பர்களிடம் தான் ரூபாய் 29 லட்சத்தை ஏ.டி.எம்.மில்., வைப்பதற்காக சின்னாளப்பட்டிக்கு கொண்டு செல்வதாக தகவல் தெரிவித்து, அவர்களை தனது இரு சக்கர வாகனத்திற்கு பின் தொடர்ந்து வரவைத்து அவரிடம் பணத்தை கொடுத்து விட்டு, தன்னை கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர் என, நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. இதன்படி இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தேவதானப்பட்டியைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் சுரேந்தர் (25) ஆமனுல்ஸ் மகன் முகமது இத்ரீஸ் (20) காமாட்சி மகன் ப்ரீத்திவ் (19) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 4 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் பணம் ரூபாய் 29 லட்சம் கொள்ளை போனதாக நாடகமாடிய நாக அர்ஜுன் மற்றும் நாடகமாடி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தேவதானப்பட்டி சேர்ந்த கார்த்தீஸ்வரன் (18) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் கார்த்தீஸ்வரன் செவ்வாய்க்கிழமை மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டான். இந்த வழக்கில் நாக அர்ஜுன் என்பவனிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், அவனை ஆத்தூர் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள செம்பட்டி போலீசார் மேலும், சிலரை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. பணத்தைப் பறித்துச் சென்றவர்களின் இருசக்கர வாகனம் மற்றும் நாக அர்ஜுன் இருசக்கர வாகனம் ஆகிய இரண்டு இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ரூபாய் 29 லட்சம் கொள்ளை போனதாக நாடகமாடி கைது செய்யப்பட்ட, நாகஅர்ஜுன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக, உரிய பாதுகாப்பு இல்லாமல் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன் சிறையில் அடைக்க அழைத்துச்சென்றார். அவருடன் மற்றொரு இருசக்கர வாகனத்தில் காவலர் பெருமாள் உடன் சென்றார். உரிய பாதுகாப்பு இல்லாமல் இரவு நேரத்தில் ரூ.29 லட்சம் கொள்கை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

