கோவை: தூய்மை பணியாளர்கள் போராட்டம் !

கோவை மாநகராட்சியில் பணி நியமனம் செய்யப்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், கடந்த 8 நாட்களாக தங்களின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாநகராட்சியில் பணி நியமனம் செய்யப்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், கடந்த 8 நாட்களாக தங்களின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம், சம்பள ரசீது, PF பிடித்தம், ESI காப்பீட்டு அட்டை வழங்கல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கும் மனுவுடன் அவர்கள் 9-வது நாளாக நேற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர். மாநகராட்சி நிர்வாகம் ரூ.540 மாத ஊதியம் வழங்குவதாக இருப்பது, மாவட்ட நிர்வாகம் அறிவித்த ரூ.770-க்கு முரணாக இருப்பதாகவும் பணியாளர்கள் குற்றம் சாட்டினர். கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். தகவல் அறிந்த காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பணியாளர் சங்க நிர்வாகிகள் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவையும் வழங்கினர்.
Next Story