கோவை: போத்தனூர் ரயில் நிலையத்தை ஆய்வு செய்த ரயில்வே மேலாளர்

கோவை: போத்தனூர் ரயில் நிலையத்தை ஆய்வு செய்த ரயில்வே மேலாளர்
X
போத்தனூர் ரயில் நிலையம் மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்த தென்னக ரயில்வே மேலாளர்.
கோவை போத்தனூர் ரயில் நிலையம், இரண்டாவது முனையமாக தரம் உயர்த்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் இதனை ஏற்று ஆய்வு மேற்கொண்டார். அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.24 கோடி மதிப்பீட்டில் மின் தூக்கி, நடைபாதை, வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மூன்று ஆண்டுகளில் பணிகள் முடிவடைந்து, புதிய ரயில் சேவைகள் இங்கு அறிமுகமாகும் எனவும், எழும்பூர் ரயில் நிலையம் மாதிரி இரண்டாவது முனையமாக இது உருவாகும் எனவும் பொதுமலாளர் தெரிவித்தார். இத்தகவல், ரயில் பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
Next Story