கீரனூர் அருகே பைக் மீது கார் மோதி விபத்து!

X
புதுகை, மாத்தூர் நிஜாம் காலணியைச் சேர்ந்த பாத்திமா (45), நிஜாமுதீன் (48) ஆகிய இருவரும் புதுக்கோட்டையிலிருந்து மாத்தூருக்கு பைக்கில் சென்றுள்ளனர். அப்போது, அவர்களுக்கு பின்னால் காரை ஓட்டி வந்த யுவராஜ் (34) மோதியதில் பாத்திமாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது கணவர் அளித்த புகாரில் கீரனூர் போலீசார் யுவராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

