மணிமேகலை விருது பெற்ற மகளிர் குழுவிற்கு பாராட்டு விழா

X
பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் ஊராட்சி புதுப் பட்டி பாரதியார் மகளிர் சுயஉதவிக்குழுவினர் தமிழக அர சின் மணிமேகலை விருது துணை முதல்-அமைச்சர் உத யநிதி ஸ்டாலினிடம் இருந்து பெற்றனர். இதைதொடர்ந்து நேற்று க.புதுப்பட்டி செல்வ விநாயகர் கோவில் முன்பு ஊர் பொதுமக்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. முன்னதாக செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷே கம்,ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பொன்னமரா வதி தாசில்தார் சாந்தா மணிமேகலை விருது பெற்ற பார தியார் மகளிர் குழுவினருக்கு பரிசு பொருட்கள் மற்றும் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். இதையடுத்து கோவில் வளாகத்தில் தென்னங்கன்று நடப்பட்டது. பின் னர் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
Next Story

