தனியார் கல்லுாரி வாகனம் மோதி கட்டட தொழிலாளி பலி!

X
கந்தர்வகோட்டை அருகே உள்ள அச்சுதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய குமார்(39). கட்டட தொழிலாளி. இவர் நேற்று காலை வேலைக்காக இருசக்கர வாகனத்தில் தஞ் சைக்கு சென்றுக் கொண்டிருந்தார். புனல்குளம் என்ற இடத்தில் சென்றபோது, தனியார் கல்லுாரி வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியதில் படுகா யமடைந்த விஜயகுமார் அதே இடத்தில் உயிரிழந் தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு சொந்தமான வாகனம் திருமயத்தை அடுத்த கல்லுார் பகுதியில் இருந்து மாணவர்களுக்கு அழைத்துக்கொண்டு செல்லும்போது, இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த நபர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். விபத்து குறித்து கே.புதுப்பட்டி போலீ சார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story

