முடிகொண்டானில் சாலை விரிவாக்க பணிக்காக கோவிலை இடிக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

முடிகொண்டானில் சாலை விரிவாக்க பணிக்காக கோவிலை இடிக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்
X
கோவிலை இடிக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்
சென்னையில் இருந்து கன்னியாகுமரி தொழில் தட மாநில நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மாநில நெடுஞ்சாலை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் திருவாரூர், மயிலாடுதுறை சாலையில் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட முடிகொண்டான் பகுதியில் சாலை ஓரத்தில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்த பெரியப் பிடாரியம்மன் கோவில் சாலை பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக கூறி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கோவிலை அகற்றுவதுற்கு வந்தனர்.அப்போது கோவிலை இடிக்க வந்த ஜேசிபி வாகனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் கோவிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஜேசிபி வாகனத்தை அந்த இடத்திலிருந்து விரட்டி அடித்தனர் மேலும் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரோடு பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நூறு ஆண்டுகள் பழமையான பெரிய பிடாரியம்மன் கோவிலை இடிக்க வந்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீசாரோடு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story