முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பள்ளி மாணவர்களுக்கான இளம் அறிவியலாளர் பயிற்சி நிறைவு விழா..

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பள்ளி மாணவர்களுக்கான இளம் அறிவியலாளர் பயிற்சி நிறைவு விழா..
X
முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பள்ளி மாணவர்களுக்கான இளம் அறிவியலாளர் பயிற்சி நிறைவு விழா..
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் - வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) யும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றமும் இணைந்து நடத்திய நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான இளம் அறிவியலாளர் உண்டு உறைவிட பயிற்சியின் நிறைவு விழாவானது, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசிய, நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் திரு. கே.விஜயன் மற்றும் நாமக்கல் மாவட்ட பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர் முனைவர்.கே. பெரியசாமி ஆகியோர், மாணவர்களாகிய நீங்கள் இந்த 15 நாட்களில் பயின்ற அனைத்துவித அறிவியல் செய்முறை கல்வியை, அவரவர்களுடைய பள்ளிகளில் உள்ள சக மாணவர்களுக்கும் பகிர்ந்து, அவர்களுக்கும் அறிவியல் முன்னேற்றத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆண்டின் துவக்கத்திலேயே இந்த இளம் அறிவியலாளர் பயிற்சியை மேற்கொண்டதன் மூலம், இந்த ஆண்டு முழுவதும் தங்கள் பள்ளிகளில் நடைபெற உள்ள அனைத்து விதமான அறிவியல் போட்டிகளிலும் பங்கேற்று சிறப்பிடம் பெற இது ஒரு வாய்ப்பாக அமையும். இந்த பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளும் வருங்காலத்தில் சிறந்த அறிவியல் விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும். தமிழ்நாடு மாநில இளம் அறிவியல் ஆராய்ச்சியாளர் விருது போட்டியில் அனைவரும் பங்கு பெற வேண்டும்" என்றனர். நிகழ்ச்சியில் முன்னதாக கல்லூரியின் செயலாளர் திரு ஆர். முத்துவேல் அவர்கள் தலைமை உரையாற்றினார். கல்லூரியின் இயக்குனர்- கல்வி முனைவர். இரா. செல்வகுமரன், முதல்வர். முனைவர். எஸ். பி. விஜயகுமார் ஆகியோர் முறையே வாழ்த்துரை மற்றும் அறிமுக உரைகளை வழங்கினர். கல்லூரியின் பாடத்திட்ட மேம்பாட்டு தலைவரும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர். எஸ். சாஹிதா அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்த 15- நாள், இளம் மாணவ அறிவியலாளருக்கான உண்டு உறைவிட பயிற்சியில், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட அரசுப் பள்ளிகளில் இருந்து 80 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிறைவு விழாவில் அவர்களுக்கான சான்றிதழ்களும், பரிசுகளும் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் தங்களது மகிழ்ச்சியான மற்றும் மன நிறைவான பின்னூட்டத்தினை வழங்கினர்.
Next Story