மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

X
Komarapalayam King 24x7 |18 Jun 2025 5:06 PM ISTகுமாரபாளையத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சிறுபான்மையினர் நல ஆணையர் ஆசியா மரியம் குமாரபாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தூர் வாரப்பட்டது உள்ளிட்ட பல இடங்களை ஆய்வு செய்தார். படவீடு, பல்லக்காபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். சமயசங்கிலி பகுதியில் உள்ள கதவணை பகுதியில், நீர் தேக்கி வைக்கும் போது, அருகில் உள்ள விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி வருகிறது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்குவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளபட்டது. திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டுமான பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இவருடன் நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, தாசில்தார் சிவகுமார், ஆர்.ஐ. புவனேஸ்வரி, வி.ஏ.ஓ. தியாகராஜன், தேவராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
