கக்கன் சிலைக்கு மாலை அணிவித்த அதிமுக எம்எல்ஏக்கள்
இந்திய சுதந்திரப்போராட்ட வீரரும், தமிழகத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராகவும்,உள்துறை அமைச்சராகவும் திறம்பட செயலாற்றிய நேர்மையின் சிகரம் தியாகசீலர் கக்கன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (ஜூன்.18) காலை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மேலூர் தும்பைப்பட்டியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, மேலூர் எம்எல்ஏ பெரிய புள்ளான் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். உடன் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story





