ஆவுடையானூர் சுடலைமாடசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

ஆவுடையானூர் சுடலைமாடசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
X
சுடலைமாடசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையானூரில் அமைந்துள்ள சுடலைமாட சுவாமி கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிசேகம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை யாகசாலை பூஜைகளும், இன்று காலை மகாகும்பாபிசேகமும் நடைபெற்றது. இது தொடர்ந்து சுடலைமாடசாமிக்கு 32 வகையான திரவியங்கள் கொண்டும் சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர், இதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story