அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

X
அரசால் தடை செய்யப்பட்ட 8.700 கிலோ கிராம் குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி கிராமத்தில் சௌந்தரராஜன் (48) த/பெ துரைசாமி, தேரடி அருகில், கல்பாடி கிராமத்தில் தனக்கு சொந்தமான SS மளிகை கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில் தனிப்படையினர் மற்றும் அவரது குழுவினர் ஆகியோர்கள் அடங்கிய குழுவினர் மேற்படி ஹான்ஸ் 435 பாக்கெட் (8.700 கிலோ கிராம்), ஆகிய குட்கா பொருட்களை பறிமுதல் செய்து கைது செய்து மருவத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மருவத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அவர்கள் மேற்படி எதிரி மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து ஹான்ஸ் 435 பாக்கெட் (8.700 கிலோ கிராம்), ஆகிய குட்கா பொருட்களை பறிமுதல் செய்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story

