கக்கன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆட்சியர்

கக்கன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆட்சியர்
X
மதுரை மேலூர் அருகே கக்கன் சிலைக்கு மாலை அணிவித்து ஆட்சியர் மரியாதை செலுத்தினார் .
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைபட்டியில் உள்ள தியாக சீலர் கக்கன் அவர்களின் நினைவிடத்தில் அவரது பிறந்தநாள் விழாவையொட்டி இன்று (ஜூன்.18) மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, தும்பைப்பட்டியில் உள்ள அன்னாரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் அதிகாரிகள் பலர் இருந்தனர். இதுபோன்று பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் கக்கன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
Next Story