புதிதாக திருமண மண்டபம் கட்டுமான பணி

புதிதாக திருமண மண்டபம் கட்டுமான பணி
X
கொத்தப்புள்ளி கிராமத்தில் புதிதாக திருமண மண்டபம் கட்டுமான பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.217.98 கோடி மதிப்பீட்டில் 26 திருக்கோயில்களில் 49 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்து, ரூ.21.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உதவி ஆணையர் அலுவலகம், 15 ஆய்வர் அலுவலகங்கள் மற்றும் 16 திருக்கோயில்களில் 17 முடிவுற்ற பணிகளை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம், கொத்தப்புள்ளி கிராமத்தில் பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் புதிதாக திருமண மண்டபம் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இந்த திருமண மண்டபம் சுமார் 2.94 ஏக்கர் பரப்பளவில் தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் அமைக்கப்படவுள்ளது. இங்கு 500 நபர்கள் தங்கும் வசதியுடன் கூடிய ஓய்வு மண்டபம், உணவுக்கூடம், சமையலறை, சரக்கு வைப்பறை, கழிப்பறை – 7, மின் வசதி அறை, அலுவலகம், மின் மோட்டார் அறை, பராமரிப்பு அறை, அலுவலர்கள் அறை, மின் துாக்கி -2 ஆகிய வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பிரமணியன் மற்றும் உறுப்பினர்கள், துணை ஆணையாளர் வெங்கடேஷ், துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story