வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் இன்று தொடக்கம்

வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் இன்று தொடக்கம்
X
வாரம் தோறும் புதன்கிழமைகளில் வலங்கைமானில் நடைபெறும் பருத்தி ஏலத்தில் விவசாயிகள் பங்கேற்க அழைப்பு
வலங்கைமான் பகுதியில் 6000 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வலங்கைமானில் நீடாமங்கலம் சாலையில் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடப்பு பருவத்திற்கான பருத்திக் கொள்முதல் புதன்கிழமையான இன்று செயலாளர் கண்ணன் உத்தரவின் பேரில் தொடங்கப்பட்டது.வாரம் தோறும் புதன்கிழமைகளில் ஏலம் நடைபெற உள்ளது
Next Story