வத்திராயிருப்பு அருகே விவசாயத் தோப்பில் உள்ள மோட்டார் ரூமில் மின்சாரம் தாக்கி மின்சாரம் தாக்கி விவசாயி பலி....*
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே விவசாயத் தோப்பில் உள்ள மோட்டார் ரூமில் மின்சாரம் தாக்கி மின்சாரம் தாக்கி விவசாயி பலி.... விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சேது நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி (53). இவர் அதே பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான தென்னந்தோப்பிற்கு சென்றபோது அவரது தோப்பில் உள்ள மின் மோட்டார் அறையில் பீஸ் வயரை பிடுங்கி பீஸ் போட்டபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சுருண்டு கீழே விழுந்துள்ளார். உடனே தோப்பில் இருந்தவர்கள் அவரை தூக்கி கொண்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் முத்துச்சாமியை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் முத்துச்சாமியின் உடல் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் பிரதேச பரிசோதனை செய்யப்பட்டு பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இது குறித்து வத்திராயிருப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story



