தென்னிலை -தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஆய்வு செய்த ஆட்சியர்.
தென்னிலை -தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஆய்வு செய்த ஆட்சியர். உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் இன்று கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா தென்னிலை பகுதியில் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஆய்வு மேற்கொண்டார். நியாய விலை கடைகளுக்கு விநியோகம் செய்யப்படும் அனைத்து பொருட்களும் இந்த கிடங்கில் இருந்து தான் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே இருப்பில் வைத்துள்ள பொருட்கள் அனைத்தும் தரமானதாகவும் , சரியானதாகவும் உள்ளதா எனவும் உணவு பொருட்களை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். இந்த ஆய்வின்போது அரவக்குறிச்சி தர ஆய்வு துணை மேலாளர் சதாசிவம் கலந்து கொண்டு பொருட்களின் தரம் குறித்து விளக்கி கூறினார்.
Next Story





