காவல் நிலையத்தில் திமுக கவுன்சிலர் புகார்

காவல் நிலையத்தில் திமுக கவுன்சிலர் புகார்
X
வடமதுரை காவல் நிலையத்தில் திமுக கவுன்சிலர் புகார்
திண்டுக்கல் வடமதுரை காவல் நிலையத்தில் அய்யலூர் அருகே கொன்னையம்பட்டியை சேர்ந்த திமுக கவுன்சிலர் தனபாக்கியம் என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரில் தெரிவித்திருப்பதாவது கொன்னையம்பட்டியில் பாலம் கட்டுவதற்கு பேரூராட்சி சார்பில் தீர்மானம் போடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு பூமி பூஜை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு கொன்னையம்பட்டியை சேர்ந்த சின்னப்பன் (எ) பரமசிவம் என்பவர் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்து எனது வீட்டிற்கு வந்து அசிங்கமாகவும், ஆபாசமாகவும் பேசி என் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story