தொட்டியபட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சார இயக்கம்..

தொட்டியபட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி பிரச்சார இயக்கம்..
X
தொட்டியபட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சார இயக்கம்..
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து வெண்ணந்தூர் ஒன்றியம் தொட்டிய பட்டியில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது ஒன்றிய பாஜக அரசு விலைவாசி உயர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும் பெட்ரோல் டீசல் விலைகளை குறைத்துவிட வேண்டும் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்து விட வேண்டும் பெரும் முதலாளிகளுக்கு வரிச்சலுகை வழங்குவதை கைவிட்டு செல்வ வரி விதிக்க வேண்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலையை 200 நாட்களாக மாற்றி தொடர்ந்து வேலை வழங்கிட வேண்டும் வேலை செய்தவர்களுக்கான சம்பளத்தை மாதம் தோறும் பாக்கி இல்லாமல் வழங்கிட வேண்டும் பெண் குழந்தைகள் பெண்கள் மீதான தாக்குதல்களை கட்டுப்படுத்திட வேண்டும் மாநில அரசு வீட்டு மனை இல்லாத ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை வழங்கிடவும் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கிடவும் காவல் நிலைய சித்தரவதைகள், என்கவுண்டர்கள் தடுக்கப்படுவதோடு பொதுமக்கள் அரசியல் மற்றும் தொழிற்சங்க இயக்கங்களில் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வலியுறுத்தியும் மாதம் தோறும் மின் கணக்கீடு நடத்தி மின் கட்டணம் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தொட்டிபட்டி ஊராட்சியில் போயர் தேவேந்திரகுல வேளாளர் ஆசாரியர் சமூக மக்களுக்கு மயான வசதி செய்து கொடுத்திடவும் வீட்டுமனை இல்லாத ஏழை குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கிடவும் பட்டா இல்லாத குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கிட வலியுறுத்தியும் பிரச்சார இயக்கம் கிளைச் செயலாளர் ஆர்.நடேசன் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் எஸ். கந்தசாமி ,ஒன்றிய குழு உறுப்பினர் ஆர். லட்சுமி கிளை செயலாளர் எஸ். மீனாட்சி, மற்றும் நிர்வாகிகள் ஆர்.செல்வம் எல். பெரியசாமி கே. ராஜேந்திரன் சோமன் (எ)பழனிச்சாமி உள்ளிட்ட ஏராளமான வர்கள் கலந்து கொண்டனர்.
Next Story