ஜெயங்கொண்டத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க காலதாமதம் :- நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா

X
அரியலூர், ஜூன்.18- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 16 - வது வார்டில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு முறையாக குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க மனு அளித்து நகராட்சி நிர்வாகத்தால் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு நீரோட்டங்கள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் காலதாமதமானதால் அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்திற்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் நகராட்சி ஆணையர் அசோக்குமார் மற்றும் நகரமன்ற தலைவர் சுமதி சிவகுமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக இடத்தினை தேர்வு செய்து ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story

