இந்து முன்னணி நிர்வாகி நினைவு தினம்

X
குமரி மாவட்டம் இரணியல் அருகே கக்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் இந்து முன்னணி தலைவர் ஆக பதவி வகித்தார். கடந்த 2014 ம் ஆண்டு ஜூன் மாதம் 18 ம் தேதி தீவிர வாதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது நினைவு தினம் முன்னிட்டு இன்று காலை திங்கள் நகர் இராதாகிருஷ்ணன் கோயில் அருகே நினைவு அஞ்சலி செலுத்த பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், ஆலோசகர் மிசாசோமன், குருந்தன்கோடு ஒன்றிய தலைவர் மணிகண்டன், வக்கீல் சிவகுமார், ஜெயசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கக்கோட்டில் உள்ள அவரது சமாதியில் அஞ்சலி செலுத்த பட்டது.
Next Story

