வளவனுார் அருகே கொலை வழக்கில் நான்கு பேர் கைது

வளவனுார் அருகே கொலை வழக்கில் நான்கு பேர் கைது
X
மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்
விழுப்புரம் வட்டம், வளவனூா் காவல் சரகத்துக்குள்பட்ட ராம்பாக்கம் விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த ரவி மகன் ரஞ்சித் (26), கூலித் தொழிலாளி. இவா் கடந்த 13-ஆம் தேதி ராம்பாக்கத்தை அடுத்த சொரப்பூா் மயானப் பகுதியில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தாா். தகவலறிந்த வளவனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று ரஞ்சித்தின் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், ராம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ், அவரது நண்பா்கள் சோ்ந்து உருட்டுக்கட்டை, இரும்புக் கம்பியால் ரஞ்சித்தை அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது.ராம்பாக்கத்தைச் சோ்ந்த நாகமுத்து மகன் சுரேஷ் (26), திருமால் மகன் தரணி (23), தமிழ்வாணன் மகன் மதன்(23), மோகன் மகன் ஹரி (22), மடுகரையைச் சோ்ந்த இருவா் உள்பட 6 போ் மீது வளவனூா் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனா்.சுரேஷ், தரணி, மதன் ஆகியோரை போலீஸாா் திங்கள்கிழமையும், ஹரியை செவ்வாய்க்கிழமையும் போலீஸாா் கைது செய்தனா். 4 பேரும் விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Next Story