ராசிபுரம் இந்து அறநிலையத்துறை சரக ஆய்வாளர் அலுவலகம் திறப்பு

ராசிபுரம் இந்து அறநிலையத்துறை சரக ஆய்வாளர் அலுவலகம் திறப்பு
X
ராசிபுரம் இந்து அறநிலையத்துறை சரக ஆய்வாளர் அலுவலகம் திறப்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள இந்து சமய அறநிலைத்துறையின் சரக ஆய்வாளர் அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து ராசிபுரம் கைலாசநாதர் கோவில் முன்பாக நடைபெற்ற திறப்பு விழாவில் நாமக்கல் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் எஸ்.ரங்கசாமி, ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர் ஆகியோர் ரிப்பன் வெட்டி அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தனர். பொதுமக்கள், பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அறநிலையத்துறை ஆய்வாளர் சு.கீதாமணி, கோவில் செயல் அலுவலர் சவிதா, கோவில் அர்ச்சகர்கள் சிவ ஸ்ரீ உமாபதி சிவம், ஸ்ரீமதுதில்லை நாத சிவாச்சாரியார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
Next Story