வளவனூரில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

வளவனூரில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
X
மாவட்டச் செயலாளர் லட்சுமணன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், வளவனுார் பேரூர் தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.வளவனுார் நடுமில் திடலில் நடந்த கூட்டத்திற்கு, மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பேசுகையில்;முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் சாதனை திட்டங்களை, பொது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.பொது மக்களை நேரில் சந்தித்து அவர்களது தேவையை கேட்டறிந்து நிறைவேற்ற வேண்டும். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பணியை உடனே துவங்க வேண்டும், கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும், மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைய கட்சியினர் தீவிரமாக உழைக்க வேண்டும் என கூறினார்.அதைத் தொடர்ந்து, தி.மு.க., ஆட்சியின் நான்கு ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கினார்.
Next Story