விழுப்புரம் ஓட்டுப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கில் ஆட்சியர் ஆய்வு

X
இந்திய தேர்தல் ஆணைய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கில், கலெக்டர் ஆய்வு செய்தார்.மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் உள்ளதா என்பது குறித்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை காலாண்டு தணிக்கை மேற்கொள்வது வழக்கம்.அதன்படி விழுப்புரம் பெருந்திட்ட வளாக, இந்திய தேர்தல் ஆணைய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, ஆர்.டி.ஓ., முருகேசன், தேர்தல் தனி தாசில்தார் கணேஷ், தாசில்தார் கனிமொழி, காங்., மாவட்ட தலைவர் ரமேஷ், கவுன்சிலர் மணவாளன், பா.ஜ., சுகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
Next Story

