விழுப்புரம் ஆட்சியரை முற்றுகையிட்ட இருளர் குடும்பத்தினர் பரபரப்பு

விழுப்புரம் ஆட்சியரை முற்றுகையிட்ட இருளர் குடும்பத்தினர் பரபரப்பு
X
சமாதானம் செய்து வைத்து தீர்வு காணுவதாக அனுப்பி வைத்த ஆட்சிய
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அத்தியூரில் வசிக்கும் பழங்குடி இருளர் குடும்பத்தினர் தங்களுக்கு சுடுகாடு பகுதியில் அரசு வழங்கிய இலவச மனைப்பட்டாவை மாற்றி தர கோரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது அத்தியூரில் 34 பேருக்கு மனைப்பட்டா வழங்க இடம் தேர்வு செய்தனர். ஆனால், திடீரென கோணிப்பட்டு கிராம எல்லையில் சுடுகாடு அருகே மனைப்பட்டா வழங்கினர். அது நீர்பிடிப்பு பகுதி. மழைக்காலங்களில் அதிக தண்ணீர் தேங்கும். பஸ் நிறுத்தம் செல்ல 4 கி.மீ., நடந்து செல்ல வேண்டும். சாலை வசதி இல்லை. குடியிருக்க தகுதியற்ற இடம். எனவே, அரசு வழங்கிய பட்டாவை ரத்து செய்து ஏற்கனவே தேர்வு செய்த இடத்தில் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story