மரக்காணம் அருகே சாலை விபத்தில் வாலிபர் இறப்பு

மரக்காணம் அருகே  சாலை விபத்தில் வாலிபர் இறப்பு
X
மரக்காணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
வானுார் அடுத்த ராயபேட்டையைச் சேர்ந்தவர் ஜாபர் அலி மகன் சவுகத் அலி, 26; டாக்டர். இவர் கடந்த 8ம் தேதி கல்பாக்கத்தில் உள்ள அவரது கிளினிக்கிற்கு பைக்கில் இ.சி.ஆரில் சென்றார். மரக்காணம் அடுத்த கூனிமேடு பஸ் நிறுத்தம் அருகே எதிரே வந்த தனியார் பஸ் மோதியதில், படுகாயமடைந்தார். உடன், புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று இறந்தார். மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story