சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை!

சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை!
X
சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா முருகேசன் தெரு கங்கையம்மன் கோவில் எதிரில் உள்ள 2வது தெருவில் மின்கம்பத்தில் உள்ள ஒயர் மிக தாழ்வாக செல்கிறது.அவ்வழியாக பொதுமக்கள் ,பள்ளி மாணவர்கள், இருசக்கர வாகனங்கள், கால்நடைகள் சென்று வருகின்றன. மின்கம்பி சேதமடைந்து பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முன்கூட்டியே இழப்புகளை தடுக்க மின்வாரியம் சரிசெய்து தருமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
Next Story