“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தில் ஆய்வு

X
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, குஜிலியம்பாறையில் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். தங்கச்சியம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்பட்டுள்ளதா, சுகாதாரமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா, வகுப்பறைகள் சுத்தமாக உள்ளதா, கழிப்பறைகள் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா என்பதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, ஆர்.புதுக்கோட்டையில் தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளின் விளைநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், ஆர்.பி.பில்லமநாயக்கன்பட்டி நியாயவிலைக்கடையில் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, பொருட்கள் இருப்பு, தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் குருமூர்த்தி மற்றும் அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Next Story

