சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி அதிமுக நகர செயலாளர் ஜி.கே.மூர்த்தி பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபடுவதும் புஞ்சைப் புளியம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வதும் தொட

சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி அதிமுக நகர செயலாளர் ஜி.கே.மூர்த்தி பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபடுவதும் புஞ்சைப் புளியம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.
சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி அதிமுக நகர செயலாளர் ஜி.கே.மூர்த்தி பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபடுவதும் புஞ்சைப் புளியம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியின் அதிமுக நகர செயலாளராக இருந்து வருபவர் ஜி.கே.மூர்த்தி இவர் தொடர்ந்து பெண்களிடம் சில்மிஷம் செய்து புஞ்சைபுளியம்பட்டி காவல் துறையில் வழக்குகள் பதியப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. ஏற்கனவே ஒரு பெண்ணிடம் சில்மிஷம் செய்து வழக்கு பதியப்பட்டு சிறைக்குச் சென்று திரும்பி வந்த அதிமுக புஞ்சைபுளியம்பட்டி நகர செயலாளர் ஜி.கே.மூர்த்தி தற்போது மீண்டும் அதே பெண்ணிடம் தகராறு செய்து அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்து அவரை மீண்டும் கைது செய்துள்ளனர். தற்போது அதிமுக தலைமை கழகம் ஆட்சியில் அமர வேண்டும் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் பொறுப்பில் உள்ள அதிகாரத்தை வைத்துக்கொண்டு அலட்சியத்தில் இதுபோன்று அத்துமீறல்களில் ஈடுபடும் நல்ல பொறுப்புகளில் இருக்கும் கட்சியினர் மீது அதிமுக தலைமை கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story