சைபர் கிரைம் குற்றவாளிகள் மூவர் கைது

X
மதுரை மாவட்டத்தில் 2025-ம் ஆண்டு ஆன்லைன் மூலமாக Crypto Currency ல் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறி மதுரை மாவட்டம் திருவேடகத்தை சேர்ந்த நபர் ஒருவரை ஏமாற்றி ரூ.11,52,350/- பணத்தை ஆன்லைன் பணமோசடி மூலம் பெற்று ஏமாற்றிய வழக்கில் ஈடுபட்ட திருப்பூரைச் சேர்ந்த ஹரிகரன் த/பெ. சேகர், சங்கர் த/பெ. சண்முகவடிவேல் மற்றும் பரசுராம் த/பெ. ரவி ஆகிய மூவரை திருப்பூரில் வைத்து மதுரை மாவட்ட சைபர் கிரைம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய செல்போன்கள், சிம்கார்டுகள் மற்றும் பேங்க் பாஸ் புக்குகள் ஆகியவற்றை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேற்படி எதிரிகளை விசாரணை செய்ததில் கமிஷன் பணத்திற்காக எதிரிகள் அவர்களுடைய வங்கி கணக்குகளை சைபர் குற்றவாளிகளுக்கு கொடுத்து அவர்கள் ஆன்லைன் பணமோசடி செய்து பொதுமக்களிடமிருந்து பணத்தை பெறுவதற்கு உதவியாக இருந்ததும் அதற்கு லட்ச கணக்கில் கமிஷன் பணம் பெற்றதும் தெரியவந்துள்ளது.
Next Story

