கோவை: ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மலரும் பிரம்ம கமலம் பூத்தது

பாண்டுக்கு ஒருமுறை மட்டுமே மலரும் பிரம்ம கமலம் பூ கோவை சுந்தராபுரம் பகுதியில் ஒரு வீட்டில் நேற்று மலர்ந்தது.
கோவை சுந்தராபுரத்தில், தங்கவேலு என்பவரது வீட்டில் நேற்று இரவு தெய்வீக நறுமணத்துடன் பிரம்ம கமலம் மலர்ந்தது. ஆண்டில் ஒருமுறை மட்டுமே இரவில் மலர்ந்து காலையில் உதிரும் இந்த அரிய மலர், வழக்கமாக இமயமலை மற்றும் உத்தரகாண்ட் பகுதிகளில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. தங்கவேலுவின் குடும்பம், இதனை நீண்ட நாட்களாக பராமரித்து வந்த நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன் மொட்டு வைத்த மலர் நேற்று இரவு மலர்ந்தது. இந்த அதிசய நிகழ்வை கண்ட அக்கம் பக்கத்தினர் அனைவரும் கூடி பூஜை செய்து வழிபட்டனர். ஆன்மிகம், தூய்மை, அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பின் சின்னமாக கருதப்படும் பிரம்ம கமலம், மலர்வதை காண்பது பாக்கியமாகவும், மனச்சாந்தியை தருவதாகவும் நம்பப்படுகிறது.
Next Story