மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை!

X
கோவில்பட்டியில் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த குருசாமி மகன் ராஜ் (47). தொழிலாளியான இவர், மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று கோவில்பட்டி லட்சுமி ஆலை அருகே, தூத்துக்குடியிலிருந்து மைசூருக்கு சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து கோவில்பட்டி ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், தூத்துக்குடி ரயில்வே போலீசார் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

