சேலத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர் தற்கொலை

சேலத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர் தற்கொலை
X
போலீசார் விசாரணை
சேலம் சூரமங்கலம் மல்லமூப்பம்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் கமலேஷ் (வயது 19). இவர் சோளம்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு இருசக்கர வாகன ஷோரூமில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இதனிடையே, அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், மீண்டும் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கமலேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது கமலேஷ் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story