வாழப்பாடியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

வாழப்பாடியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
X
நாளை நடக்கிறது
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் வாழப்பாடி கோட்டத்தில் மாதந்தோறும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் கூட்டம் சிங்கிபுரம் துணை மின் நிலைய வளாகத்தில் வாழப்பாடி கோட்ட அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் வாழப்பாடி கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை நேரில் தெரிவித்து பயன் பெற்றுக்கொள்ளலாம் என்று வாழப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.
Next Story