சேலத்தில் நேற்று இரவு பலத்த மழை

X
சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். நேற்று காலை வெயிலின் தாக்கம் ஓரளவு இருந்ததால் வெப்பத்தின் அளவு 93.2 டிகிரியாக பதிவாகி இருந்தது. மாலையில் வானம் இருள்சூழ்ந்து காணப்பட்டது. சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் மாநகரில் உள்ள பெரும்பாலான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் சாக்கடை கால்வாய் கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலைகளில் ஓடியது. குறிப்பாக சேலம் புதிய பஸ் நிலையத்தில் குளம் போல் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் பயணிகள் பெரிதும் அவதியுற்றனர். மேலும் கிச்சிப்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள கடைக்குள் மழைநீர் புகுந்தது. இந்த மழை அரை மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. பின்னர் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது.
Next Story

